புற்றுநோய் ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் $15 மில்லியன் செலுத்தும் ஜான்சன் அண்ட் ஜான்சன்

October 16, 2024

பல தசாப்தங்களாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் டால்க் பவுடரைப் பயன்படுத்தியதால் மீசோதெலியோமா என்ற புற்றுநோய் ஏற்பட்டதாகக் கூறி இவான் ப்ளாட்கின் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், கனெக்டிகட் நடுவர் மன்றம் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு ரூ.15 மில்லியன் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், கூடுதல் தண்டனை தொகையை வழங்க வேண்டும் எனவும் நடுவர் மன்றம் பரிந்துரைத்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் டால்க் பவுடர் விற்பனையை ஜான்சன் அண்ட் ஜான்சன் […]

பல தசாப்தங்களாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் டால்க் பவுடரைப் பயன்படுத்தியதால் மீசோதெலியோமா என்ற புற்றுநோய் ஏற்பட்டதாகக் கூறி இவான் ப்ளாட்கின் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், கனெக்டிகட் நடுவர் மன்றம் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு ரூ.15 மில்லியன் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், கூடுதல் தண்டனை தொகையை வழங்க வேண்டும் எனவும் நடுவர் மன்றம் பரிந்துரைத்துள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் டால்க் பவுடர் விற்பனையை ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் நிறுத்திவிட்டது. மேலும், தங்களது தயாரிப்புகள் புற்றுநோய் ஏற்படுத்துவதாக தொடரப்பட்ட பல வழக்குகளுக்கு எதிராக ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் வாதிட்டு வருகிறது. தற்போது, கனெக்டிகட் நடுவர் மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அத்துடன், இதே போன்ற 62,000-க்கும் மேற்பட்ட வழக்குகளைத் தீர்ப்பதற்காக, ரூ.9 பில்லியன் தொகையை இழப்பீடாக வழங்க ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu