மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்துக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், வெஸ்ட் இண்டீஸ் அணியும் இங்கிலாந்து அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ், முதலில் பந்துவீசியது. அதன்படி இங்கிலாந்து 141 ரன்கள் அடித்து, 7 விக்கெட்டுகளை இழந்தது. ஹேலி மேத்யூஸ் மற்றும் கியானா ஜோசப், அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அரை சதம் விளாசினர். அதனை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ், 18 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களை அடித்து வெற்றி பெற்றது.