இன்று முதல் மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கமாக இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில் சேவைகள், இன்று (வியாழக்கிழமை) முதல் வழக்கமாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை, ரெயில்கள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை விமான நிலையம் வரை 6 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படும். மேலும் வண்ணாரப்பேட்டை முதல் ஆலந்தூர் வரையிலும் 3 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.