அக்டோபரில் தீபாவளி கொண்டாட்டத்துக்கான புதிய கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள் தீபாவளியை பாதுகாப்பாகக் கொண்டாடுவதற்காக அரசாங்கம் சில கட்டுப்பாடுகளை ஆண்டுதோறும் அமல்படுத்துகிறது. அதே போல் இந்த ஆண்டும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பட்டாசுகளை வெடிக்கும் வண்ணம் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
அதன்படி தீபாவளி அன்று, காலை 6-7 மணி மற்றும் இரவு 7-8 மணிக்குள் மட்டும் குறைந்த ஒலியுடன் மற்றும் மாசு உண்டாக்கும் பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பசுமை பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கூட்டமாக பட்டாசுகள் வெடிக்கும்போது, உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன் செயல்பட வேண்டும். அதிக ஒலியூட்டும் பட்டாசுகளை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதியான இடங்களில் பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்கவில்லை.














