ஹிஸ்புல்லா பதுங்கு குழியில் கோடிகளில் பணம், தங்கம் உள்ளது - இஸ்ரேல்

October 23, 2024

பெய்ரூட்டில் உள்ள அல்சஹல் மருத்துவமனையின் கீழே ஹிஸ்புல்லாவின் பதுங்கு குழியில் தங்கம் மற்றும் 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கிடைத்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்புக்கு நிதியுதவி வழங்கும் நிறுவனங்கள் மீது இஸ்ரேல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவம் பெய்ரூட்டில் உள்ள பெரிய நிதி அடங்கிய ஒரு பதுங்கு குழியை கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக, இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறியதாவது, "பெய்ரூட்டில் உள்ள அல்சஹல் மருத்துவமனையின் கீழே முக்கியமான பதுங்கு குழி உள்ளது. இது […]

பெய்ரூட்டில் உள்ள அல்சஹல் மருத்துவமனையின் கீழே ஹிஸ்புல்லாவின் பதுங்கு குழியில் தங்கம் மற்றும் 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கிடைத்துள்ளது.

ஹிஸ்புல்லா அமைப்புக்கு நிதியுதவி வழங்கும் நிறுவனங்கள் மீது இஸ்ரேல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவம் பெய்ரூட்டில் உள்ள பெரிய நிதி அடங்கிய ஒரு பதுங்கு குழியை கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக, இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறியதாவது, "பெய்ரூட்டில் உள்ள அல்சஹல் மருத்துவமனையின் கீழே முக்கியமான பதுங்கு குழி உள்ளது. இது ஹசன் நஸ்ரல்லாவின் ரகசிய மையமாக செயல்படுகிறது. இங்கே கண்டுபிடிக்கப்பட்ட தங்கம் மற்றும் பணத்தின் மதிப்பு 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.4,200 கோடி). இந்த நிதியை பயன்படுத்தி லெபனானை மீண்டும் கட்டமைக்கலாம்" என அவர் தெரிவித்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu