ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து - தீர்மானம் நிறைவேற்றம்

November 6, 2024

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது மத்திய அரசு 2019 ஆம் ஆண்டில் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை நீக்கி, அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசமாக மாற்றியிருந்தது. இதில், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், தேசிய மாநாடு கட்சி- காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. உமர் அப்துல்லா, ஜம்மு […]

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது

மத்திய அரசு 2019 ஆம் ஆண்டில் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை நீக்கி, அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசமாக மாற்றியிருந்தது. இதில், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், தேசிய மாநாடு கட்சி- காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. உமர் அப்துல்லா, ஜம்மு காஷ்மீர் முதல் அமைச்சராக பதவி ஏற்றார். அதனை தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரில் நீக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மீண்டும் வழங்க வலியுறுத்தி, அந்த மாநிலத்தின் சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு பாஜக எம்.எல்.ஏ.க்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu