கோவை தொழில் அதிபர் மார்ட்டின் மீது ரூ.910 கோடி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை வாழ் தொழில் அதிபர் மார்ட்டின், சிக்கிம் மாநிலத்தில் லாட்டரி விற்பனை முறைகேடு செய்து ரூபாய். 910 கோடியை பல நிறுவனங்களில் முதலீடு செய்ததாக அமலாக்கத்துறை கூறியுள்ளது. இதன் அடிப்படையில், கடந்த ஆண்டு மார்ட்டின் வீடு மற்றும் அலுவல்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கர்நாடகா, உத்தரபிரதேசம், மேகாலயா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில், மார்ட்டினுடன் தொடர்புடைய 22 இடங்களில் சோதனைகள் நடைபெற்றன. இதனால் ரூபாய். 12.41 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், பல ஆவணங்களும் டிஜிட்டல் சாதனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.