வாட்ஸ்அப்பில் புகைப்படங்களின் தரத்தை மாற்றும் புதிய வசதி அறிமுகம்

November 5, 2022

வாட்ஸ்அப் பயனாளர்கள், புகைப்படங்களை பதிவேற்றம் செய்யும் போது, அதன் தரத்தை மாற்றும் அம்சத்தை பெற வெகு நாட்களாக காத்திருந்து வருகின்றனர். அந்த வகையில், வாட்ஸ்அப் செயலியில், புகைப்படங்களின் தரத்தை மாற்றி அனுப்பும் புதிய அம்சத்தை நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புதிய அம்சம் மூலம், மூன்று நிலைகளில் புகைப்படத் தரத்தை மாற்றி அனுப்ப முடியும். முதல் நிலை, “உயர்தர” புகைப்படத்தை அனுப்புவது (Best Quality). இதற்கு, பயனாளரின் அதிகப்படியான டேட்டா செலவாகும். இரண்டாவது, குறைந்த தரத்திலான புகைப்படத்தை அனுப்புவது […]

வாட்ஸ்அப் பயனாளர்கள், புகைப்படங்களை பதிவேற்றம் செய்யும் போது, அதன் தரத்தை மாற்றும் அம்சத்தை பெற வெகு நாட்களாக காத்திருந்து வருகின்றனர். அந்த வகையில், வாட்ஸ்அப் செயலியில், புகைப்படங்களின் தரத்தை மாற்றி அனுப்பும் புதிய அம்சத்தை நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த புதிய அம்சம் மூலம், மூன்று நிலைகளில் புகைப்படத் தரத்தை மாற்றி அனுப்ப முடியும். முதல் நிலை, “உயர்தர” புகைப்படத்தை அனுப்புவது (Best Quality). இதற்கு, பயனாளரின் அதிகப்படியான டேட்டா செலவாகும். இரண்டாவது, குறைந்த தரத்திலான புகைப்படத்தை அனுப்புவது (Low Quality). இதற்கு பயனாளரின் டேட்டா செலவிடப்படாது. எனவே, இது டேட்டா சேவர் (Data Saver) என்று அழைக்கப்படுகிறது. மூன்றாவது, புகைப்படத்தின் தரம் குறித்த நிர்ணயத்தை வாட்ஸ்அப் செயலி மேற்கொள்ளும். புகைப்படத்தின் அடிப்படையிலும், பயனாளரின் டேட்டா அடிப்படையிலும், புகைப்படத்தின் பதிவேற்ற தரம் நிர்ணயம் செய்யப்படும். பொதுவாக, வைஃபை இணைப்பில் இருக்கும் பொழுது, ‘உயர்தர’ புகைப்படமாக அனுப்பப்படும். மொபைல் டேட்டா மூலம் புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டால், ‘டேட்டா சேவர்’ அல்லது குறைந்த தரத்திலான புகைப்படம் அனுப்பப்படும். இந்த அணுகுமுறை, ஆட்டோ (Auto) என்று அழைக்கப்படுகிறது.

வாட்ஸ்அப் செயலியில் உள்ள “செட்டிங்ஸ்” பகுதியில், இதற்கான தேர்ந்தெடுப்புகளை பயனாளர்கள் பதிவு செய்ய வேண்டும். ஸ்டோரேஜ் மற்றும் டேட்டா என்ற பிரிவின் கீழ், இந்த அம்சம் இடம்பெற்றிருக்கும். பொதுவாக, வாட்ஸ்அப் செயலி, தரத்தை நிர்ணயம் செய்யும் படியாக உள்ள, ஆட்டோ என்ற மூன்றாவது முறையே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu