கயானா நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்திய நேரப்படி இன்று (நவம்பர் 20) காலை கயானாவில் தரையிறங்கினார். அவரை வரவேற்க கயானா அதிபர் இர்ஃபான் அலி, பிரதமர் மார்க் அந்தோனி பிலிப்ஸ் மற்றும் முக்கிய அமைச்சர்கள் விமான நிலையத்தில் வருகை தந்தனர். சமூக ஊடகத்தில் புகைப்படங்களை பகிர்ந்த பிரதமர் மோடி, "இந்த பயணம் இந்தியா-கயானா நட்புறவை மேலும் வலுப்படுத்தும்" என குறிப்பிட்டார்.
கயானாவில் வாழும் இந்தியர்கள் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மூன்று நாடுகள் பயணத்தின் இறுதிகட்டமாக கயானாவில் நவம்பர் 21 வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ள பிரதமர், அதற்கு முன்பு நைஜீரியா மற்றும் பிரேஸிலில் நடந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டார்.