அமெரிக்காவில், கவுதம் அதானி மீது சூரிய சக்தி திட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதன் பேரில், அமெரிக்கா நீதிமன்றம் அதானிக்கான பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து, கென்யா அதிபர் வில்லியம் ரூட்டோ அதானி குழுமத்தின் ஒப்பந்தங்களை அதிரடியாக ரத்து செய்துள்ளார். அதானி குழுமம் கென்யாவில் 30 ஆண்டுகளுக்கு 736 மில்லியன் டாலர் மதிப்பில் எரிசக்தி ஒப்பந்தங்களை பெற்றிருந்தது. அவற்றை அனைத்தையும் ரத்து செய்துள்ளதோடு, மின் பகிர்மானம் மற்றும் விமான நிலைய விரிவாக்கம் தொடர்பான திட்டங்களையும் ரத்து செய்துள்ளது. கென்யா அரசாங்கம் அதானி குழுமத்தின் முன்மொழிவுகளை பரிசீலித்து வருவதாக கென்யா அதிபர் தெரிவித்தார்.