தமிழ்நாடு ஆளுநர், பொது மற்றும் தனியார்துறை பங்களிப்பில் நிறுவப்படவுள்ள தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைப்பதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
பொது மற்றும் தனியார்துறை பங்களிப்பில் நிறுவப்படவுள்ள தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை அமைப்பதற்கான மசோதாவிற்கு தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த மசோதா, கடந்த பிப்ரவரியில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.இந்த ஆணையம் நெடுஞ்சாலைகள் கட்டுமானம், மேம்பாடு, பராமரிப்பு மற்றும் மேலாண்மைக்கு பொறுப்பாக செயல்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு ஆளுநருக்கு அனுப்பப்பட்ட இந்த மசோதா தற்போது ஒப்புதல் பெற்றுள்ளது.இந்த ஆணையத்தின் முக்கிய பணி, நெடுஞ்சாலைகள் பராமரிப்பு, தரம் உயர்த்தல் மற்றும் நீண்டகால திட்டங்களை உருவாக்குவதாகும். மேலும், ஆணையத்திற்கு ஒரு தலைவர், மூன்று முழுநேர உறுப்பினர்கள் மற்றும் மூன்று பகுதிநேர உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள். இந்த உறுப்பினர்கள் 62 வயதுக்குள் பணியாற்ற முடியும்.நெடுஞ்சாலைகளை பராமரிக்கும் மற்றும் தரத்தை மேம்படுத்தும் பணிகளுக்கான உடனடி மற்றும் நீண்டகால திட்டங்களை தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் உருவாக்க முடியும். தனியாருடன் ஒப்பந்தங்களை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள இந்த மசோதா, ஆணையத்திற்கு அந்த அதிகாரம் அளிக்கின்றது.