மின் திருட்டில் சிக்கிய எம்.பி.க்கு ரூ. 1.91 கோடி அபராதம்

December 20, 2024

சமாஜ்வாதி எம்.பி. ஜியாஉர் ரஹ்மானுக்கு மின்சாரம் திருடியதாக 1 கோடி அபராதம் விதிப்பு உத்தர பிரதேச மாநிலம், சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஜியாஉர் ரஹ்மான் மீது மின்சாரம் திருடியதாக குற்றச்சாட்டு எழுந்து, ரூ. 1 கோடி 91 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மின்சாரத் துறை அதிகாரிகள், எம்.பி. யின் வீட்டில் ஆய்வு செய்து, மின்சாதனங்கள் மற்றும் இணைப்புகளின் விவரங்களை கணக்கிட்டு, மோசடி நிகழ்ந்ததை கண்டுபிடித்தனர். அவர் 50க்கும் மேற்பட்ட எல்இடி பல்புகள், பல குளிர்சாதனங்கள் […]

சமாஜ்வாதி எம்.பி. ஜியாஉர் ரஹ்மானுக்கு மின்சாரம் திருடியதாக 1 கோடி அபராதம் விதிப்பு

உத்தர பிரதேச மாநிலம், சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஜியாஉர் ரஹ்மான் மீது மின்சாரம் திருடியதாக குற்றச்சாட்டு எழுந்து, ரூ. 1 கோடி 91 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மின்சாரத் துறை அதிகாரிகள், எம்.பி. யின் வீட்டில் ஆய்வு செய்து, மின்சாதனங்கள் மற்றும் இணைப்புகளின் விவரங்களை கணக்கிட்டு, மோசடி நிகழ்ந்ததை கண்டுபிடித்தனர். அவர் 50க்கும் மேற்பட்ட எல்இடி பல்புகள், பல குளிர்சாதனங்கள் மற்றும் பல கனரக மின்சாதனங்கள் பயன்படுத்தி வந்தார். அதே சமயம், 6 மாதங்களாக மின்கட்டணம் இல்லாதிருப்பதும் கண்டறியப்பட்டது. அதன் பிறகு, எம்.பி. யின் குடும்பத்தினர், வீட்டில் சோலார் பேனல்கள் மற்றும் ஜெனரேட்டர்கள் உள்ளதாக தெரிவித்தாலும், அவை இயங்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு, மின்சாரம் திருட்டு தடுப்பு சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu