இந்தியாவில் கியா சிரோஸ் புதிய வாகனம் அறிமுகம்

December 20, 2024

புதுதில்லியில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில், கியா இந்தியா தனது புதிய காம்பாக்ட் பிரீமியம் எஸ்யூவி, சிரோஸ்-ஐ அறிமுகம் செய்துள்ளது. கிரீஸின் அழகிய சிரோஸ் தீவால் ஈர்க்கப்பட்டு பெயர் பெற்ற இந்த கார், ஸ்டைலிஷ் வடிவமைப்புடன் கூடுதலாக, 20-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் ADAS லெவல் 2 தொழில்நுட்பத்துடன் வெளியாகிறது. சிரோஸின் முன்பதிவு பிப்ரவரி 2025 முதல் தொடங்கும் என்றும், அதன் விலை விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. சிரோஸ், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் […]

புதுதில்லியில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில், கியா இந்தியா தனது புதிய காம்பாக்ட் பிரீமியம் எஸ்யூவி, சிரோஸ்-ஐ அறிமுகம் செய்துள்ளது. கிரீஸின் அழகிய சிரோஸ் தீவால் ஈர்க்கப்பட்டு பெயர் பெற்ற இந்த கார், ஸ்டைலிஷ் வடிவமைப்புடன் கூடுதலாக, 20-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் ADAS லெவல் 2 தொழில்நுட்பத்துடன் வெளியாகிறது. சிரோஸின் முன்பதிவு பிப்ரவரி 2025 முதல் தொடங்கும் என்றும், அதன் விலை விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சிரோஸ், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என இரண்டு எஞ்சின் விருப்பங்களில் கிடைக்கிறது. இவை இரண்டும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் காம்பாக்ட் மற்றும் மிட்-சைஸ் எஸ்யூவி சந்தையில் தனது பங்கை 15%லிருந்து 20% ஆக உயர்த்தும் நோக்கில், கியா இந்தியா 300 நகரங்களில் விரிவாக்கப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த வேளையில், சிரோஸ் வாகனத்தின் வரவு சாதகமானதாக பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu