கிறிஸ்துமஸ் மற்றும் கும்பமேளா முன்னிட்டு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் கும்பமேளாவை முன்னிட்டு பெங்களூருவில் இருந்து பல சிறப்பு ரெயில்கள் இயக்கப்படவுள்ளன என்று தென்மேற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, பெங்களூரு-திருவனந்தபுரம் வடக்கு சிறப்பு ரெயில் (06507) இன்று இரவு 11 மணிக்கு பெங்களூருவிலிருந்து புறப்பட்டு, நாளை மாலை 4.30 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும். திருவனந்தபுரம் வடக்கு-பெங்களூரு சிறப்பு ரெயில் (06508) நாளை மாலை 5.55 மணிக்கு திருவனந்தபுரமிலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 11.15 மணிக்கு பெங்களூருவை வந்தடையும்.
மேலும், பெங்களூரு-கலபுரகி சிறப்பு ரெயில் (06589) நாளை இரவு 9.15 மணிக்கு பெங்களூருவிலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 7.40 மணிக்கு கலபுரகியை சென்றடையும். கலபுரகி-பெங்களூரு சிறப்பு ரெயில் (06590) இன்று மற்றும் நாளை மறுநாள் (புதன்கிழமை) கலபுரகியில் இருந்து காலை 9.35 மணிக்கு புறப்பட்டு, அதே நாள் இரவு 8 மணிக்கு பெங்களூருவை வந்தடையும்.