தமிழ்நாடு அரசு நேரடி ஆன்லைன் திருமண பதிவு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில், 2009-ம் ஆண்டு கொண்டு வந்த தமிழ்நாடு திருமண பதிவு சட்டத்தின் கீழ், திருமணங்களை பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவு செய்யும் நடைமுறை நிலவி வருகிறது. 2020-ல், இந்த சட்டத்தில் திருத்தம் செய்து, மணமகன் அல்லது மணமகள் வசிக்கும் பகுதியில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் திருமணங்களை பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டது.ஆனால், இதுவரை குறைந்த எண்ணிக்கையிலான திருமணங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.
இப்பிரச்சனைக்கு தீர்வு காண, தமிழ்நாடு அரசு நேரடி ஆன்லைன் திருமண பதிவு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் தம்பதிகள் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு செல்லாமல், வீட்டிலிருந்து நேரடியாக ஆன்லைனில் பதிவு செய்யலாம். சரியான ஆவணங்களுடன் உடனடியாக சான்றிதழ் வழங்கப்படும். இந்த புதிய முறையால், மோசடி திருமணங்கள் தடுக்கப்படும் என்றும், பதிவு நடவடிக்கைகள் சீரான முறையில் நடைபெறும் என்றும் அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.














