ஜே.இ.இ. (முதன்மை) தேர்வு 2025-26 கல்வி ஆண்டிற்கான முதல் கட்ட தேர்வு 22-30-ந்தேதி வரை நடைபெறும்.
இளநிலை படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வான ஜே.இ.இ. (முதன்மை) தேர்வு 2025-26 கல்வி ஆண்டிற்கான முதல் கட்ட தேர்வு 22-30-ந்தேதி வரை நடைபெறும். தேர்வுக்கான இணையதள விண்ணப்பம் அக்டோபர் 28-ந் தேதி தொடங்கி நவம்பர் 22-ந் தேதி வரை நிறைவு பெற்றது. இந்த தேர்வு 22, 23, 24, 28, 29-ந்தேதிகளில் காலை மற்றும் மாலை இரு வேளைகளிலும் பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான முதல் தாள் தேர்வு நடைபெறும். பி.ஆர்க், பி.பிளானிங் படிப்புகளுக்கான 2-வது தாள் தேர்வு 30-ந்தேதி மாலை நடைபெறும். தேர்வின் முடிவுகள் பிப்ரவரி 12-ந்தேதி வெளியிடப்படும். மேலதிக தகவலுக்கு, jeemain.nta.nic.in மற்றும் nta.ac.in இணையதளங்களில் காணலாம்.