காசா முனையின் மத்திய பகுதிகளில் உள்ள காசா, நுசிரத், சவாடா, மஹானி மற்றும் டிர் அல் பலாக் பகுதிகள் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதில், 42 பேர் உயிரிழந்தனர்.
காசா போரில், ஹமாஸ் ஆயுதக்குழுவினருடன் இணைந்து 45,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் நடந்த மோதலில் 700க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இரு தரப்புகளுக்கும் இடையே போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், காசா முனையின் மத்திய பகுதிகளில் உள்ள காசா, நுசிரத், சவாடா, மஹானி மற்றும் டிர் அல் பலாக் பகுதிகள் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதில், 42 பேர் உயிரிழந்தனர். இதேவேளை, பணய கைதிகள் விடுதலை மற்றும் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த பேச்சுவார்த்தைகள் கத்தார் தலைநகர் தோஹாவில் விரைவில் நடக்க வாய்ப்பு உள்ளது.