மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு ஆன்லைன் முன்பதிவு இன்று தொடக்கம்

January 6, 2025

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு உண்டான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்கப்பட்டுள்ளது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் பிரபலமான ஜல்லிக்கட்டு போட்டிகள் அவனியாபுரம் (14ம் தேதி), பாலமேடு (15ம் தேதி), அலங்காநல்லூர் (16ம் தேதி) நடைபெறுகின்றன. இவ்வாறான போட்டிகளுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. போட்டிகளில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் www.madurai.nic.in என்ற இணையதளத்தின் […]

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு உண்டான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்கப்பட்டுள்ளது.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் பிரபலமான ஜல்லிக்கட்டு போட்டிகள் அவனியாபுரம் (14ம் தேதி), பாலமேடு (15ம் தேதி), அலங்காநல்லூர் (16ம் தேதி) நடைபெறுகின்றன. இவ்வாறான போட்டிகளுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. போட்டிகளில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் www.madurai.nic.in என்ற இணையதளத்தின் மூலம் தங்கள் பெயர்களை முன்பதிவு செய்ய வேண்டும்.

இந்நிலையில், ஒரே காளை ஒரே போட்டியில் மட்டும் பங்கேற்க அனுமதிக்கப்படும். சிறந்த சான்றுகள் வழங்கப்பட்டவுடன், தகுதியான வீரர்கள் மட்டும் டோக்கன் பதிவிறக்கம் செய்து, போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu