தெற்கு கலிபோர்னியாவில் ஏற்பட்ட கடும் காட்டுத் தீ லாஸ் ஏஞ்சலீஸின் மலைப்பகுதிகளில் விரைவாக பரவி வருகிறது.
தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க தீவிரமாக போராடுகின்றனர். தீ வேகமாக பரவுவதால், சாலைகள் மூடப்பட்டுள்ளன. மக்கள் தங்கள் கார்களை நிறுத்தி, பாதுகாப்பான இடங்களுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். 26,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, 30,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் என லாஸ் ஏஞ்சலீஸ் தீயணைப்பு துறையின் தலைவர் கிறிஸ்டின் குரோலி தெரிவித்தார். மிகவும் மோசமான காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக மழை பெய்யாத பகுதியில் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதாக வானிலை ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.