ரஷ்யா கச்சா எண்ணெய்: தொடர்ந்து வாங்க மத்திய அரசு முடிவு

November 9, 2022

ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இரண்டு நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். அப்போது ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்வை சந்தித்துப் பேசினார். இரு நாடுகளுக்கு இடையேயான உறவை பலப்படுத்துவது, வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், இந்த ஆண்டில் இது எங்களது ஐந்தாவது சந்திப்பு. கடந்த சில ஆண்டுகள் நிலவிய […]

ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இரண்டு நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். அப்போது ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்வை சந்தித்துப் பேசினார். இரு நாடுகளுக்கு இடையேயான உறவை பலப்படுத்துவது, வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுகுறித்து அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், இந்த ஆண்டில் இது எங்களது ஐந்தாவது சந்திப்பு. கடந்த சில ஆண்டுகள் நிலவிய கொரோனா பெருந்தொற்று வர்த்தக பிரச்னைகள் உலகப் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது இந்தியாவுக்கு சாதகம். எனவே, இதை இந்தியா தொடர்ந்து செய்யும். குறைந்த விலையில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu