இந்திய பங்குச்சந்தைகள் இன்று (பிப். 5) சரிவுடன் முடிந்தன. சென்செக்ஸ் 312.43 புள்ளிகள் (0.40%) வீழ்ச்சி அடைந்து 78,271.28ல் முடிந்தது. நிஃப்டி 50, 42.95 புள்ளிகள் (0.18%) குறைந்து 23,696.30ல் நிலைபெற்றது. ரிசர்வ் வங்கி பணவியல் குழு (RBI MPC) கூட்ட முடிவை பிப். 7 அன்று அறிவிக்கும் நிலையில் முதலீட்டாளர்கள் லாபம் பெற்றனர்.
நிஃப்டி வங்கி 185.10 புள்ளிகள் (0.37%) உயர்ந்தது. மெட்டல் (1.15%), எண்ணெய் & எரிவாயு (1.46%), பி.எஸ்.யு வங்கி (1.03%) வளர்ச்சி கண்டன. ரியல் எஸ்டேட், FMCG 1.50% மேல் சரிந்தன. சென்செக்ஸில் அதானி போர்ட்ஸ், டாடா மோட்டார்ஸ், இண்டஸ்இந்த் வங்கி ஆகியவை ஏற்றம் பெற்றன. ஏஷியன் பெயின்ட்ஸ், டைட்டன், எச்டிஎப்சி, ஐடிசி உள்ளிட்டவை வீழ்ச்சி அடைந்தன.