இன்றைய பங்குச்சந்தை நிலவரம்

February 6, 2025

இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் சென்செக்ஸ் மற்றும் நிப்டி50 பிப்ரவரி 6 (வியாழன்) அன்று தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக குறைந்தன. ரிசர்வ் வங்கி பணவியல் குழு (RBI MPC) கூட்ட முடிவை எதிர்பார்த்து முதலீட்டாளர்கள் முனைப்புடன் இருந்தனர். மூன்று நாட்கள் நடைபெற்ற கூட்டத்தின் முடிவுகள் நாளை காலை 10 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளன. வட்டித் தரத்தை குறைப்பதற்கான எதிர்பார்ப்பு சந்தையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. 30 பங்குகளை உள்ளடக்கிய பிஎஸ்இ சென்செக்ஸ் 213.12 புள்ளிகள் (0.27%) சரிந்து 78,058.16-ல் முடிந்தது. […]

இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் சென்செக்ஸ் மற்றும் நிப்டி50 பிப்ரவரி 6 (வியாழன்) அன்று தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக குறைந்தன. ரிசர்வ் வங்கி பணவியல் குழு (RBI MPC) கூட்ட முடிவை எதிர்பார்த்து முதலீட்டாளர்கள் முனைப்புடன் இருந்தனர். மூன்று நாட்கள் நடைபெற்ற கூட்டத்தின் முடிவுகள் நாளை காலை 10 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளன. வட்டித் தரத்தை குறைப்பதற்கான எதிர்பார்ப்பு சந்தையில் மாற்றத்தை ஏற்படுத்தியது.

30 பங்குகளை உள்ளடக்கிய பிஎஸ்இ சென்செக்ஸ் 213.12 புள்ளிகள் (0.27%) சரிந்து 78,058.16-ல் முடிந்தது. என்எஸ்இ நிஃப்டி 50 92.95 புள்ளிகள் (0.39%) குறைந்து 23,603.35-ல் முடிவடைந்தது. நிஃப்டி வங்கி குறியீடு 39.05 புள்ளிகள் (0.08%) மேலேறி 50,382.10-ல் முடிந்தது. அதானி போர்ட்ஸ், இன்ஃபோசிஸ், ஆக்சிஸ் பேங்க், HCL டெக், டெக் மஹிந்திரா, இண்டஸ் இந்த் பேங்க், HDFC பேங்க் ஆகியவை ஏற்றம் பெற்றன. பாரதி ஏர்டெல் (2.47%), டைட்டான், NTPC, ITC, டாடா ஸ்டீல், பவர் கிரிட் ஆகியவை சரிந்தன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu