சோமாலியாவின் ஈல் கடற்பகுதியில் கடற்கொள்ளையர்கள் மீண்டும் அதிகமாக செயல்படுகின்றனர்.
சோமாலியாவின் ஈல் கடற்பகுதியில் கடற்கொள்ளையர்கள் மீண்டும் அதிகமாக செயல்படுகின்றனர். கடந்த 2011ஆம் ஆண்டு, சோமாலியாவில் கடற்கொள்ளையர்கள் அட்டூழியத்தை மிகுந்த அளவில் பரப்பினார்கள், அதனால் சர்வதேச வணிகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. தற்போது, ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு பிறகு, கடற்கொள்ளையர்களின் செயல்பாடுகள் அதிகரித்து வருகின்றன. கடற்கொள்ளையர்கள் மீன்பிடி படகுகளை தாக்கி, அவற்றை கடத்தி கொண்டு சென்றுள்ளனர். இந்த தாக்குதல்களில் 3 மீன்பிடி படகுகள் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. மீனவர்கள் வேறு படகு மூலம் தப்பி கரைக்கு வந்தனர், ஆனால் கடற்கொள்ளையர்கள் அந்த படகுகளை கொண்டுசென்றுள்ளனர். இது சர்வதேச கடற்படையின் கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ள ஒரு சம்பவமாக அமைந்துள்ளது. தற்போது இந்த சம்பவம் குறித்து ஐரோப்பிய கடற்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.