ட்விட்டர் தளத்தை விட்டு மஸ்டோடான் தளத்திற்கு மாறும் பயனாளர்கள்!!

November 9, 2022

எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தியதன் பின்னர், பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்தார். குறிப்பாக, ப்ளூ டிக் வழங்குவதற்கு மாதம் 8 டாலர் கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்தினார். மேலும், ஆயிரக்கணக்கான பணியாளர்களை பணி நீக்கம் செய்தார். இது ட்விட்டர் பயனாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால், பொதுமக்கள், ட்விட்டர் போன்ற சேவைகளை வழங்கும் பிற சமூகத் தளத்தை பயன்படுத்த துவங்கியுள்ளனர்.   ரெட்டிட் உள்ளிட்ட பல்வேறு சமூகத் தளங்கள் இருந்தாலும், மஸ்டோடான் தளத்திற்கு அதிக அளவில் […]

எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தியதன் பின்னர், பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்தார். குறிப்பாக, ப்ளூ டிக் வழங்குவதற்கு மாதம் 8 டாலர் கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்தினார். மேலும், ஆயிரக்கணக்கான பணியாளர்களை பணி நீக்கம் செய்தார். இது ட்விட்டர் பயனாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால், பொதுமக்கள், ட்விட்டர் போன்ற சேவைகளை வழங்கும் பிற சமூகத் தளத்தை பயன்படுத்த துவங்கியுள்ளனர்.

 

ரெட்டிட் உள்ளிட்ட பல்வேறு சமூகத் தளங்கள் இருந்தாலும், மஸ்டோடான் தளத்திற்கு அதிக அளவில் ட்விட்டர் பயனாளர்கள் மாறி உள்ளனர். பிபிசி அறிக்கை படி, கடந்த வாரத்தில் மட்டுமே, 230000 புதிய பயனாளர்கள் மஸ்டோடான் தளத்தில் இணைந்துள்ளனர். மேலும், அந்த தளத்தில், ட்விட்டர் அகதிகள் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அத்துடன், இந்த தளத்தின் அம்சங்கள் மற்றும் பயன்பாடு குறித்து இணையதளத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் இலவசமாக சமூக ஊடகச் சேவையை வழங்குகிறது. மேலும், ஃபேஸ்புக் போன்ற பெரிய தளத்திற்கான நிதிகளும் இந்த நிறுவனத்திடம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu