விண்வெளிக்கு செல்லும் முதல் மாற்றுத்திறனாளி வீரர்

February 18, 2025

ஐரோப்பிய விண்வெளி முகமை, உலகின் முதல் மாற்றுத்திறனாளி விண்வெளி வீரராக ஜான் மெக்ஃபாலை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்ப அனுமதி வழங்கியுள்ளது. பிரிட்டனை சேர்ந்த அறுவை சிகிச்சை மருத்துவர் ஜான் மெக்ஃபால், விபத்தில் வலது காலை இழந்த போதிலும் பாராலிம்பிக் போட்டிகளில் சாதனை படைத்தவர். 2006-ஆம் ஆண்டு நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றதுடன், 2007-ஆம் ஆண்டு விசா பாராலிம்பிக் உலகக் கோப்பையில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றார். 2022-ஆம் […]

ஐரோப்பிய விண்வெளி முகமை, உலகின் முதல் மாற்றுத்திறனாளி விண்வெளி வீரராக ஜான் மெக்ஃபாலை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்ப அனுமதி வழங்கியுள்ளது. பிரிட்டனை சேர்ந்த அறுவை சிகிச்சை மருத்துவர் ஜான் மெக்ஃபால், விபத்தில் வலது காலை இழந்த போதிலும் பாராலிம்பிக் போட்டிகளில் சாதனை படைத்தவர். 2006-ஆம் ஆண்டு நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றதுடன், 2007-ஆம் ஆண்டு விசா பாராலிம்பிக் உலகக் கோப்பையில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றார்.

2022-ஆம் ஆண்டு, அவரை விண்வெளி பயணத்திற்கு தேர்வு செய்த ஐரோப்பிய விண்வெளி முகமை, அதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்தது. தற்போது, அவருக்குத் தேவையான மருத்துவச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால், சர்வதேச விண்வெளி நிலையத்தில் 6 மாதங்கள் பணியாற்றவுள்ளார். ஆனால், அவர் எந்த தேதி விண்வெளிக்குச் செல்லவுள்ளார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

0
0
பகிர:

தொடர்பான செய்திகள்

மேலும் படிக்க
1 2 3 321

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu