ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரமான அபுதாபியில், ‘மேட் இன் ரஷியா’ திருவிழா பிப்ரவரி 21 முதல் 25 வரை யாஸ் தீவின் யாஸ் பே வாட்டர்பிரண்டில் நடைபெறுகிறது. ரஷிய கலாச்சாரம், பாரம்பரியம், தொழில்நுட்பங்கள், மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை அமீரக மக்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் ரஷிய ஏற்றுமதி மையம், ரஷிய தூதரகம், மற்றும் அபுதாபி வர்த்தக மற்றும் தொழில்துறை சபை இணைந்து இதை நடத்துகின்றன. அனைவருக்கும் இலவச நுழைவுச் சீட்டு வழங்கப்படும்.
ரஷ்யாவின் பாரம்பரிய மெஸேன் ஓவியங்கள் முக்கியக் கலாச்சாரக் குறியீடாக இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ரஷியாவின் 10 முன்னணி அழகு சாதன நிறுவனங்கள் தங்கள் தரமான தயாரிப்புகளை காட்சிப்படுத்தவுள்ளன. பிரபல கலைஞர்கள் கலையமைப்புகளுடன் பங்கேற்கும் இந்த விழாவில், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீடுகளை மேம்படுத்தும் வாய்ப்பு உருவாகும் என கூறப்படுகிறது.