ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 16 இ கைபேசி வெளியீடு

ஆப்பிள் நிறுவனம் புதன்கிழமை (பிப். 19) ஐபோன் 16 இ மாடலை அறிமுகப்படுத்தி உள்ளது. முதன் முதலில் ‘ஆப்பிள் இண்டெலிஜன்ஸ்’ செயற்கை நுண்ணறிவு வசதியுடன் இது வெளியாகியுள்ளது. 6.06 இன்ச் OLED தொடுதிரை, A18 சிப், 48MP கேமரா, மற்றும் ஃபேஸ் அன்லாக் ஆகியவை இதன் முக்கிய அம்சங்கள். இதன் வடிவமைப்பு ஐபோன் 14 மாதிரியே காணப்பட்டாலும், 0.1 மி.மீ. மெல்லியதாகவும், 0.7 மி.மீ. குறைவான உயரத்துடனும் உள்ளது. USB-C சார்ஜிங் கொண்டுள்ள இது 7.5W வயர்லெஸ் […]

ஆப்பிள் நிறுவனம் புதன்கிழமை (பிப். 19) ஐபோன் 16 இ மாடலை அறிமுகப்படுத்தி உள்ளது. முதன் முதலில் ‘ஆப்பிள் இண்டெலிஜன்ஸ்’ செயற்கை நுண்ணறிவு வசதியுடன் இது வெளியாகியுள்ளது. 6.06 இன்ச் OLED தொடுதிரை, A18 சிப், 48MP கேமரா, மற்றும் ஃபேஸ் அன்லாக் ஆகியவை இதன் முக்கிய அம்சங்கள். இதன் வடிவமைப்பு ஐபோன் 14 மாதிரியே காணப்பட்டாலும், 0.1 மி.மீ. மெல்லியதாகவும், 0.7 மி.மீ. குறைவான உயரத்துடனும் உள்ளது. USB-C சார்ஜிங் கொண்டுள்ள இது 7.5W வயர்லெஸ் சார்ஜிங் வசதி மட்டுமே வழங்குகிறது.

128GB ஸ்டோரேஜ் கொண்ட அடிப்படை மாடலின் விலை 599 டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 64GB மாடல் இல்லை. ஒருமுறை சார்ஜ் செய்தால் 26 மணி நேரம் வரை நீடிக்கும். இந்தியாவில் ரூ. 59,900 விலையில் கறுப்பு, வெள்ளை நிறங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. ஆப்பிள், இந்தியாவின் முன்னணி 5 ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றாக மாறியுள்ள நிலையில், இந்த புதிய மாடல் அதன் விற்பனையை மேலும் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu