சென்னை- மைசூரு 'வந்தே பாரத்' ரயில் சேவை: பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்

November 10, 2022

பெங்களூரு வழியாக சென்னை - மைசூரு இடையே இயக்கப்படும் நாட்டின் 5-வது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். ஒரு நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி நாளை (வெள்ளிக்கிழமை) கர்நாடகத்தின் தலைநகர் பெங்களூருவுக்கு வருகிறார். அங்கு, அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அதன் பிறகு அவர் அங்கிருந்து கார் மூலம் பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்திற்கு வருகிறார். அங்கு காலை 11 மணியளவில் சென்னை-மைசூரு வந்தேபாரத் […]

பெங்களூரு வழியாக சென்னை - மைசூரு இடையே இயக்கப்படும் நாட்டின் 5-வது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.

ஒரு நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி நாளை (வெள்ளிக்கிழமை) கர்நாடகத்தின் தலைநகர் பெங்களூருவுக்கு வருகிறார். அங்கு, அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அதன் பிறகு அவர் அங்கிருந்து கார் மூலம் பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்திற்கு வருகிறார். அங்கு காலை 11 மணியளவில் சென்னை-மைசூரு வந்தேபாரத் அதிவிரைவு ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். அத்துடன் அதே இடத்தில் பாரத் கவுரவ் காசி தரிசன ரயில் சேவையையும் பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைக்க இருக்கிறார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu