ஊரக மக்களுக்கு வேலைவாய்ப்பு உறுதிப்படுத்தும் 100 நாள் வேலை திட்டத்தில் தமிழகத்துக்கான சம்பளம் ரூ.17 அதிகரித்து ரூ.336 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
மத்திய அரசு செயல்படுத்தும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு 100 நாட்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதில் நாடு முழுவதும் 11.92 கோடி தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்; தமிழ்நாட்டில் மட்டும் 88.16 லட்சம் பேர் உள்ளனர். 2025-26ம் ஆண்டுக்கான ஊதியத்தை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. அதன் படி, தமிழகத்தில் தினசரி சம்பளம் ரூ.319-ல் இருந்து ரூ.336-ஆக உயர்ந்துள்ளது. கடந்தாண்டு ரூ.2,900 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், ரூ.1,400 கோடி நிலுவையில் உள்ளது. ஆனால் இந்தாண்டு முதல்கட்டமாக ரூ.920 கோடி சம்பள நிதியாக தமிழகத்துக்குப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.