தமிழ்நாடு அரசு, சமூகத்தில் புறக்கணிக்கப்படும் பிரிவுகளை ஆதரிக்க சிறப்பு சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.3.45 கோடி வாழ்வாதார நிதியாக வழங்கியுள்ளது.
இது தொடர்பாக மகளிர் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பழங்குடியினர், நலிவுற்றோர் மற்றும் திருநங்கையரைச் சேர்ந்த 23 சிறப்பு குழுக்களுக்கு ரூ.23 லட்சம், 227 முதியோர் குழுக்களுக்கு ரூ.2.27 கோடி மற்றும் 95 மாற்றுத் திறனாளிகள் குழுக்களுக்கு ரூ.95 லட்சம் என மொத்தம் 345 சிறப்பு சுயஉதவிக் குழுக்களுக்கு இந்நிதி வழங்கப்பட்டுள்ளது.
சுய உதவிக் குழுக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் வழங்கப்படும் இந்த நிதியை நேர்மையாகவும் பயனுள்ளதாகவும் பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.