ஏ.டி.எம்.களில் குறைந்தபட்சம் 75% கேசெட்டுகளில் ரூ.100 அல்லது ரூ.200 நோட்டுகள் இருக்க வேண்டும்.
நாட்டின் ஏ.டி.எம். எந்திரங்களில் பெரும்பாலும் ரூ.500 நோட்டுகள் மட்டுமே உள்ளதால், சிறிய தொகையை பெற முடியாமல் பலரும் அவதிப்பட்டு வந்தனர். இதுதொடர்பான புகார்கள் அதிகரிக்க, ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் புதிய உத்தரவு வெளியிட்டுள்ளது. வரும் செப்டம்பர் 30க்குள் ஏ.டி.எம்.களில் குறைந்தபட்சம் 75% கேசெட்டுகளில் ரூ.100 அல்லது ரூ.200 நோட்டுகள் இருக்க வேண்டும். மார்ச் 31, 2026க்குள் இது 90% ஆக உயரவேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. தற்போது ரூ.2000 நோட்டு புழக்கத்தில் இல்லாத நிலையில், ஏ.டி.எம்.களில் பல இடங்களில் ரூ.100, ரூ.200 நோட்டுகள் வைக்கப்படவில்லை. இதை மாற்றவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.