நடப்பு ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், சூரிய எரிசக்தியை பயன்படுத்தியதன் மூலம், இந்தியா 4.2 பில்லியன் அமெரிக்க டாலர்களை சேமித்து உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. புத்தாக்க எரிசக்தி மற்றும் தூய்மையான காற்று குறித்த ஆராய்ச்சி நிலையம் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சூரிய மின் உற்பத்தி காரணமாக, இந்தியாவில் 19.4 மில்லியன் டன் நிலக்கரி சேமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா உட்பட சீனா, ஜப்பான், தென் கொரியா, வியட்நாம், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் ஆகிய ஆசிய நாடுகள், சூரிய எரிசக்திக்கு மாறியுள்ளன. குறிப்பாக, இந்தியா இதில் சிறப்பாக செயல்பட்டு உள்ளதாக சிஆர்இஏ அறிக்கை தெரிவிக்கிறது. இதனால், உலக அளவில், 34 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான எரிபொருள் செலவு குறைந்துள்ளது என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையில், எரிபொருளுக்காக ஏற்பட்ட செலவில் 34 பில்லியன் என்பது 9% ஆகும்.