மதுரை–ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு ரூ.1853 கோடி ஒதுக்கீடு!

தென் மாவட்ட வளர்ச்சி, சுற்றுலா முன்னேற்றம், வேகமான போக்குவரத்து ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, மத்திய அரசு புதிய நெடுஞ்சாலை திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், மதுரை–ராமேஸ்வரம்–தனுஷ்கோடி நெடுஞ்சாலை திட்டம் முக்கியமாகப் பேசப்பட்டது. ஏற்கனவே மதுரை–பரமக்குடி வரை நான்கு வழி சாலை கட்டப்பட்டுள்ளது. தற்போது பரமக்குடி–ராமநாதபுரம் வரை 46.7 கி.மீ. தூரத்தில் நான்கு வழி சாலை கட்ட ரூ.1,853 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம்–தனுஷ்கோடி வரை சாலை நீட்டிப்பு திட்ட அறிக்கையும் […]

தென் மாவட்ட வளர்ச்சி, சுற்றுலா முன்னேற்றம், வேகமான போக்குவரத்து ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, மத்திய அரசு புதிய நெடுஞ்சாலை திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், மதுரை–ராமேஸ்வரம்–தனுஷ்கோடி நெடுஞ்சாலை திட்டம் முக்கியமாகப் பேசப்பட்டது. ஏற்கனவே மதுரை–பரமக்குடி வரை நான்கு வழி சாலை கட்டப்பட்டுள்ளது. தற்போது பரமக்குடி–ராமநாதபுரம் வரை 46.7 கி.மீ. தூரத்தில் நான்கு வழி சாலை கட்ட ரூ.1,853 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம்–தனுஷ்கோடி வரை சாலை நீட்டிப்பு திட்ட அறிக்கையும் தயாராகி வருகிறது. இதன் மூலம் பயண நேரம் 40% குறையும் என்றும், தென் மாவட்டங்களில் பொருளாதாரம், சுற்றுலா, வேலைவாய்ப்புகள் வளர்ச்சியடையும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu