பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெற உள்ளது. இதில் மத்திய அரசு பல புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெற உள்ளது. மொத்தம் 21 அமர்வுகள் உள்ள இந்த கூட்டத்தொடருக்குள், 8 புதிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. இதில் விளையாட்டு நிர்வாகம், நினைவுச்சின்னங்கள் பாதுகாப்பு, சுரங்க மேம்பாடு, ஊக்கமருந்து தடுப்பு, வருமான வரி திருத்தம் உள்ளிட்டவை உள்ளடங்கும். மேலும் மணிப்பூர் மசோதா மற்றும் ஐஐஎம் மசோதாவும் தாக்கல் செய்யப்படும். இதற்கேற்ப மாநில மானிய கோரிக்கைகளுக்கும் ஒப்புதல் பெற அரசு முனைவுடன் செயல்படுகிறது. இதே நேரத்தில் எதிர்க்கட்சிகள் ஆபரேஷன் சிந்தூர், வாக்காளர் பட்டியல் திருத்தம் போன்ற விவகாரங்களில் அரசை எதிர்க்க திட்டமிட்டுள்ளன. எனவே கூட்டத்தொடர் சூடான விவாதங்களுக்கு அரங்கமாக இருக்கும்.