ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து TRF அமைப்பை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காமில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா அமைப்பின் கிளையான 'தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்' (TRF) பொறுப்பேற்றது. தற்போது அமெரிக்க வெளியுறவுத்துறை TRF அமைப்பை 'வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு' (FTO) என்றும், 'உலகளாவிய பயங்கரவாதி அமைப்பு' (SDGT) என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல் உறுதியாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் TRF-ஐ தடைசெய்த நாடுகளின் பட்டியலில் இணைத்த அமெரிக்கா, அந்த அமைப்பின் நடவடிக்கைகளுக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது.