விசா இல்லாமல் 59 நாடுகளுக்கு பயணிக்கலாம்: ஹென்லி பட்டியலில் இந்தியா 77வது இடம் பிடித்து சாதனை

July 24, 2025

2025 ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டில் இந்தியா 8 இடங்கள் முன்னேறி 77வது இடத்தைப் பிடித்துள்ளது. இது கடந்த 6 மாதங்களில் மிகப் பெரிய முன்னேற்றமாகும். லண்டனில் அமைந்துள்ள ஹென்லி நிறுவனம் வெளியிட்ட பாஸ்போர்ட் சக்தி பட்டியலில், இந்தியா தற்போது 77வது இடத்தில் உள்ளது. 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் 85வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 59 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கக்கூடிய பாஸ்போர்டை பெற்றுள்ளது. இதில் மலேசியா, மாலத்தீவுகள், தாய்லாந்து, பூட்டான், நேபாளம் போன்ற நாடுகள் அடங்கும். […]

2025 ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டில் இந்தியா 8 இடங்கள் முன்னேறி 77வது இடத்தைப் பிடித்துள்ளது. இது கடந்த 6 மாதங்களில் மிகப் பெரிய முன்னேற்றமாகும்.

லண்டனில் அமைந்துள்ள ஹென்லி நிறுவனம் வெளியிட்ட பாஸ்போர்ட் சக்தி பட்டியலில், இந்தியா தற்போது 77வது இடத்தில் உள்ளது. 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் 85வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 59 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கக்கூடிய பாஸ்போர்டை பெற்றுள்ளது. இதில் மலேசியா, மாலத்தீவுகள், தாய்லாந்து, பூட்டான், நேபாளம் போன்ற நாடுகள் அடங்கும். உலக அளவில் சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்து, அதன் பாஸ்போர்ட் வைத்தவர்கள் 193 நாடுகளுக்குள் விசா இல்லாமல் செல்ல முடிகிறது. டென்மார்க், பின்லாந்து உள்ளிட்ட நாடுகள் 189 நாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. முன்னணி நாடுகளின் இடம் சற்று சரிந்த நிலையில், இந்தியாவின் முன்னேற்றம் முக்கியமானதாகவும் பாராட்டுதலுக்குரியதாகவும் பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu