ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் புதிய கணக்குகளுக்கு மினிமம் பேலன்ஸ் அதிகரிப்பு – புதிய விதிமுறைகள் அமல்!

August 9, 2025

நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும், ரிசர்வ் வங்கியின் கொள்கைகளுக்கு ஏற்ப தங்களது விதிமுறைகளை அவ்வப்போது மாற்றி வருகின்றன. கடந்த மாதங்களில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, கனரா மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கிகள் தங்களது குறைந்தபட்ச இருப்புத் தொகையை உயர்த்தி வாடிக்கையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. அதே போன்று, தற்போது ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி புதிய வாடிக்கையாளர்களுக்கான மினிமம் பேலன்ஸை மாற்றியுள்ளது. புதிய கணக்கு தொடங்குபவர்களுக்கு, மெட்ரோ மற்றும் நகர்ப்புற பகுதிகளில் ரூ.50,000, சிறிய நகரங்களில் ரூ.25,000, கிராமப்புறங்களில் ரூ.10,000 […]

நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும், ரிசர்வ் வங்கியின் கொள்கைகளுக்கு ஏற்ப தங்களது விதிமுறைகளை அவ்வப்போது மாற்றி வருகின்றன. கடந்த மாதங்களில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, கனரா மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கிகள் தங்களது குறைந்தபட்ச இருப்புத் தொகையை உயர்த்தி வாடிக்கையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. அதே போன்று, தற்போது ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி புதிய வாடிக்கையாளர்களுக்கான மினிமம் பேலன்ஸை மாற்றியுள்ளது. புதிய கணக்கு தொடங்குபவர்களுக்கு, மெட்ரோ மற்றும் நகர்ப்புற பகுதிகளில் ரூ.50,000, சிறிய நகரங்களில் ரூ.25,000, கிராமப்புறங்களில் ரூ.10,000 என உயர்த்தி உள்ளது.

இந்த விதிகள் கடந்த 1ஆம் தேதியில் இருந்து புதிய கணக்குகளுக்கே பொருந்தும் என்றும், ஏற்கனவே கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பழைய நிலைமை தொடரும் என்றும் வங்கி தெரிவித்துள்ளது. மேலும், கிளை மற்றும் பண மறுசுழற்சி இயந்திரங்களில் பணம் வைப்பு தொடர்பான இலவச பரிவர்த்தனை எண்ணிக்கையும் மூன்று முறைகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மூன்றை கடந்தபின், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.150 கட்டணமாக வசூலிக்கப்படும் என வங்கி அறிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu