அமெரிக்கா–சீனா இடையிலான வர்த்தக போர் கடந்த ஆண்டுகளில் தீவிரமடைந்த நிலையில், பரஸ்பர வரிவிதிப்புகள் உலக சந்தையை பாதித்துள்ளன. தற்போது அமெரிக்கா 90 நாட்கள் கூடுதல் அவகாசம் அளித்துள்ளது.
சீனாவால் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்பட்டதாகத் தெரிவித்த அதிபர் டொனால்டு டிரம்ப், பதிலடியாக சீன பொருட்களுக்கு அமெரிக்காவில் அதிக வரி விதிக்க தொடங்கினார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக போர் உருவானது. இந்த பதுக்கலான சூழ்நிலை உலகெங்கும் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தி, எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வை வளர்ந்து வரும் நாடுகள் எதிர்கொண்டன. ஒரு கட்டத்தில் சீன பொருட்களுக்கு 145% வரி விதிக்கப்பட்டது. பின்னர் இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி, புதிய வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தின. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சீனாவுக்கான அந்த இடைவேளை மேலும் 90 நாட்கள் நீட்டிக்க உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.














