சூடான் டார்பர் மலைப்பகுதியில் நிலச்சரிவு – 1,000க்கும் மேற்பட்டோர் பலி

September 2, 2025

கனமழையால் ஏற்பட்ட பேரிடர், முழு கிராமமே மண்ணில் புதைந்தது; சூடானில் உள்நாட்டுப் போரின் நடுவே பெரும் சோகம். சூடான் நாட்டின் டார்பர் மலைப்பகுதியில் கனமழையால் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த பேரிடரால் ஒரு முழு கிராமமே மண்ணின் அடியில் புதைந்து சிதைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் இருந்து ஒரே ஒருவர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளார் என்று உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சூடான் நாட்டில் உள்நாட்டுப் […]

கனமழையால் ஏற்பட்ட பேரிடர், முழு கிராமமே மண்ணில் புதைந்தது; சூடானில் உள்நாட்டுப் போரின் நடுவே பெரும் சோகம்.

சூடான் நாட்டின் டார்பர் மலைப்பகுதியில் கனமழையால் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த பேரிடரால் ஒரு முழு கிராமமே மண்ணின் அடியில் புதைந்து சிதைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் இருந்து ஒரே ஒருவர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளார் என்று உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சூடான் நாட்டில் உள்நாட்டுப் போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அப்பகுதி மக்கள் தஞ்சம் அடைந்திருந்த இடத்திலேயே இந்த பேரிடர் தாக்கியது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu