இந்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகத்தின் சார்பாக, மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இந்தியாவின் முதல் பூங்கா அமைக்கும் ஒப்பந்தம் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சுமார் 7.17 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை, 45 வருடங்களுக்கு கையாள, இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதற்காக, சென்னையில் 184.27 ஏக்கர் நிலப்பரப்பில் லாஜிஸ்டிக்ஸ் பூங்கா அமைக்கப்பட உள்ளது.
இந்தப் பூங்கா மூன்று கட்டங்களாக கட்டமைக்கப்பட உள்ளது. வரும் 2025 க்குள் முதல் கட்ட பணிகள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு 1424 கோடி ரூபாயாகும். இந்த திட்டம், பிரதம மந்திரியின் காடி சக்தி தேசிய திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் சார்பாக நாடெங்கிலும் 35 லாஜிஸ்டிக்ஸ் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. அடுத்த மூன்று வருடங்களுக்குள் 15 பூங்காக்கள் அமைக்கும் பணி தொடங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.