போலி கணக்குகள் அதிகரிப்பால் ட்விட்டரின் ப்ளூ டிக் சேவை நிறுத்தப்படுகிறது

November 12, 2022

ட்விட்டரின் ப்ளூ டிக் சந்தா நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போலி கணக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஐபோன்களில், 8 டாலர் கட்டணம் செலுத்தி, ட்விட்டர் நிறுவனத்தின் ப்ளூ டிக் சேவையை பயன்படுத்தும் முறை அமல் படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அதனை செயல்படுத்த முயன்றால், “உங்கள் விருப்பத்தை மதிக்கிறோம். ஆனால், உங்கள் நாட்டில், இன்னும் ப்ளூ டிக் சேவை செயல்படுத்தப்படவில்லை. சிறிது காலம் கழித்து சரிபார்க்கவும்” என்ற செய்தி அறிவிக்கப்படுகிறது. யார் வேண்டுமானாலும் கட்டணம் செலுத்தி […]

ட்விட்டரின் ப்ளூ டிக் சந்தா நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போலி கணக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஐபோன்களில், 8 டாலர் கட்டணம் செலுத்தி, ட்விட்டர் நிறுவனத்தின் ப்ளூ டிக் சேவையை பயன்படுத்தும் முறை அமல் படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அதனை செயல்படுத்த முயன்றால், “உங்கள் விருப்பத்தை மதிக்கிறோம். ஆனால், உங்கள் நாட்டில், இன்னும் ப்ளூ டிக் சேவை செயல்படுத்தப்படவில்லை. சிறிது காலம் கழித்து சரிபார்க்கவும்” என்ற செய்தி அறிவிக்கப்படுகிறது.

யார் வேண்டுமானாலும் கட்டணம் செலுத்தி சரிபார்க்கப்பட்ட பயனராக மாறலாம் என்று எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். அதன்படி, பல்வேறு போலி கணக்குகளுக்கு சந்தாக்கள் செலுத்தப்பட்டன. குறிப்பாக, டொனால்ட் டிரம்ப், இயேசு கிறிஸ்து போன்றவர்கள் பெயரில் போலி கணக்குகள் ப்ளூ டிக் பெற்றன. எனவே, போலி கணக்குகளை முடக்கும் நடவடிக்கையாக, ப்ளூ டிக் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu