கட்டாய மதமாற்றம் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஆகும். இதுகுறித்து அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கட்டாய மதமாற்றம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. கட்டாய மத மாற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அஸ்வினி குமார் உபாத்யாய் மனுதாக்கல் செய்தார்.
இதன் விசாரணையின் போது நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் ஹிமா கோஹ்லி, கட்டாய மதமாற்றம் மிகவும் தீவிரமான பிரச்சினை என்றும், இது நாட்டின் பாதுகாப்பு மற்றும் மத சுதந்திரத்தை பாதிக்கிறது என்றும் கூறினர். கட்டாய மதமாற்றம் நிறுத்தப்படாவிட்டால் மிகவும் கடினமான சூழ்நிலை உருவாகும் என்று எச்சரித்துள்ளனர். இது தொடர்பாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மேலும், கட்டாய மதமாற்ற விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.