லடாக் எல்லையில் 3டி பிரின்டிங் மூலம் ராணுவ பாதுகாப்பு கட்டமைப்பு

November 17, 2022

லடாக் எல்லையில் 3டி பிரின்டிங் மூலம் ராணுவ பாதுகாப்பு கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. லடாக்கில் கடந்த 2020 மே மாதம் மோதலில் ஈடுபட்ட பின்னர், எல்லையில் இந்திய ராணுவம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இது குறித்து ராணுவ தரப்பில் கூறுகையில், ராணுவத்தில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது மிகவும் அவசியம். அந்த வகையில் 3டி பிரின்டிங் தொழில்நுட்பத்தின் மீது கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளோம். இதன் மூலம் குறுகிய கால அளவில் தேவையான கட்டுமானங்களை மேற்கொள்ள முடிகிறது. சோதனை முயற்சியாக 3டி […]

லடாக் எல்லையில் 3டி பிரின்டிங் மூலம் ராணுவ பாதுகாப்பு கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.

லடாக்கில் கடந்த 2020 மே மாதம் மோதலில் ஈடுபட்ட பின்னர், எல்லையில் இந்திய ராணுவம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இது குறித்து ராணுவ தரப்பில் கூறுகையில், ராணுவத்தில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது மிகவும் அவசியம். அந்த வகையில் 3டி பிரின்டிங் தொழில்நுட்பத்தின் மீது கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளோம்.

இதன் மூலம் குறுகிய கால அளவில் தேவையான கட்டுமானங்களை மேற்கொள்ள முடிகிறது. சோதனை முயற்சியாக 3டி பிரின்டிங் மூலம் பாதுகாப்புத் தளங்கள் கட்டப்பட்டு சோதிக்கப்பட்டன. 100 மீட்டர் தொலைவில் டி-90 பீரங்கியில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டாலும், இந்தக் கட்டுமானங்கள் தாங்குகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu