ஜெர்மனிக்கு இயற்கை எரிவாயு வழங்குவதில் மாஸ்கோ பங்குவகிப்பதாகக் க௫தி ரஷ்யாவின் காஸ்ப்ரோமுக்கு கனடா Turbine ஐ ஒப்படைப்பதை உக்ரைன் எதிர்க்கிறது. மேலும் இந்த நடவடிக்கை ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை மீறும் செயலாகும் என்று உக்ரேனிய எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கிய்வ் இந்த நடவடிக்கையை எதிர்த்ததாகவும், கனடாவில் ஜெர்மனியின் சீமென்ஸ் எனர்ஜியால் சர்வீஸ் செய்யப்பட்ட Turbine ஐ ஒப்படைக்க வேண்டாம் என்று அதன் எரிசக்தி அமைச்சர் கனடா அரசிடம் ஜூன் மாதம் வற்புறுத்தியதாகவும் கூறினார்.