வாட்ஸ் அப்பில் புதிய பிசினஸ் அம்சம் அறிமுகம் - மார்க் ஜுக்கர்பர்க் அறிவிப்பு

November 19, 2022

பிரேசில், பிரிட்டன், இந்தோனேஷியா, மெக்சிகோ, கொலம்பியா ஆகிய நாடுகளில், துறை சார்ந்த வணிகத் தேடலுக்கான புதிய அம்சம் வெளியிடப்படுவதாக மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜுக்கர்பர்க் அறிவித்துள்ளார். பிரேசிலில் நடைபெற்ற வாட்ஸ்அப் வணிக மாநாட்டில், இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. மேலும், வாட்ஸ்அப் செயலியில், சாதாரண தகவல் பரிமாற்றத்துடன் இணைந்த முறையில், வணிக செயல்பாடுகளை எளிமையாக வழங்குவதே நோக்கம் என்று கூறப்பட்டது. வாட்ஸ்அப் மூலம் வணிகம் செய்யும் லட்சக்கணக்கான சிறு வணிகர்களுக்கு இந்த புதிய அம்சம் உதவியாக இருக்கும் […]

பிரேசில், பிரிட்டன், இந்தோனேஷியா, மெக்சிகோ, கொலம்பியா ஆகிய நாடுகளில், துறை சார்ந்த வணிகத் தேடலுக்கான புதிய அம்சம் வெளியிடப்படுவதாக மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜுக்கர்பர்க் அறிவித்துள்ளார்.

பிரேசிலில் நடைபெற்ற வாட்ஸ்அப் வணிக மாநாட்டில், இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. மேலும், வாட்ஸ்அப் செயலியில், சாதாரண தகவல் பரிமாற்றத்துடன் இணைந்த முறையில், வணிக செயல்பாடுகளை எளிமையாக வழங்குவதே நோக்கம் என்று கூறப்பட்டது. வாட்ஸ்அப் மூலம் வணிகம் செய்யும் லட்சக்கணக்கான சிறு வணிகர்களுக்கு இந்த புதிய அம்சம் உதவியாக இருக்கும் என்று கூறப்பட்டது. ‘வணிகத்தை தேடு’ (Find a Business) என்ற புதிய அம்சத்தின் மூலம், துறை சார்ந்த வணிக நிறுவனத்தை தேட முடியும். மேலும், வாங்கு (Buy) என்ற அம்சம் மூலம், நேரடியாக உள்ளூர் வணிகரிடம் இருந்து பொருட்களை வாங்க முடியும். இவை பிரேசிலில் வழங்கப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டில் சோதனை நிறைவடைந்த பின்னர், மேற்கூறிய பிற நாடுகளுக்கு இந்தச் சேவைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu