மைக்ரோசாப்ட் டீம்ஸ்-ல் சைகை மொழி அம்சம் அறிமுகம்

November 19, 2022

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது வீடியோ கான்பரன்ஸ் தளமான டீம்ஸ்-ல் சைகை மொழி அம்சத்தை வெளியிடுவதாக அறிவித்துள்ளது. வீடியோ கான்பரன்ஸ் காலில் இருக்கும் பொழுது, இரண்டு பேரை மையமாக தேர்ந்தெடுக்க வேண்டும். அவர்களின் வீடியோ காட்சி, குறிப்பிட்ட அந்த கான்ஃபரன்ஸ் முடியும் வரை திரையில் தெரியும். இவர்கள் சைகை மொழி பயன்பாட்டாளர் என்பதால், ஒட்டுமொத்த வீடியோ கான்பரன்ஸ் தரவுகளும் சைகை மொழியில் ஒளிபரப்பாகும். திரையில், வீடியோ கான்பரன்ஸ் காட்சி பெரிதாகவும், சைகை மொழி பயன்பாட்டாளரின் காட்சி சிறிதாகவும் இடம்பெறும் […]

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது வீடியோ கான்பரன்ஸ் தளமான டீம்ஸ்-ல் சைகை மொழி அம்சத்தை வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

வீடியோ கான்பரன்ஸ் காலில் இருக்கும் பொழுது, இரண்டு பேரை மையமாக தேர்ந்தெடுக்க வேண்டும். அவர்களின் வீடியோ காட்சி, குறிப்பிட்ட அந்த கான்ஃபரன்ஸ் முடியும் வரை திரையில் தெரியும். இவர்கள் சைகை மொழி பயன்பாட்டாளர் என்பதால், ஒட்டுமொத்த வீடியோ கான்பரன்ஸ் தரவுகளும் சைகை மொழியில் ஒளிபரப்பாகும். திரையில், வீடியோ கான்பரன்ஸ் காட்சி பெரிதாகவும், சைகை மொழி பயன்பாட்டாளரின் காட்சி சிறிதாகவும் இடம்பெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், டீம்ஸ் தளத்தை பயன்படுத்தும் நிறுவனங்கள் தான், சைகை மொழி பயன்பாட்டாளர்களை அமர்த்த வேண்டும். மைக்ரோசாப்ட் நிறுவனம் இவர்களை அமர்த்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது ஒருவரின் தனிப்பட்ட அம்சத்தில் ஏற்படுத்தப்படும் மாறுதல் என்பதால், சாதாரண வீடியோ கான்பரன்ஸ் காட்சி எந்த வகையிலும் பாதிக்காது என்று கூறப்பட்டுள்ளது. எனவே, இது காது கேட்காத/வாய் பேச இயலாத பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu