புதுச்சேரி அரசு ஊழியர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வரவில்லை - அதிகாரிகள் குழு ஆய்வு

November 21, 2022

புதுச்சேரி அரசு துறைகளில் ஊழியர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வருவதில்லை என்ற புகாரில் குடிமை பொருள் வழங்கல் துறை அலுவலகத்தில் அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. புதுச்சேரி அரசு துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு வருவதில்லை என்றும், இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாவதாக தலைமை செயலகத்துக்கு அதிகளவில் புகார் வந்தது. இந்நிலையில் நிர்வாக சீர்திருத்தத்துறையின் கண்காணிப்பாளர் கலியபெருமாள் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் குடிமை பொருள் வழங்கல் துறை […]

புதுச்சேரி அரசு துறைகளில் ஊழியர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வருவதில்லை என்ற புகாரில் குடிமை பொருள் வழங்கல் துறை அலுவலகத்தில் அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

புதுச்சேரி அரசு துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு வருவதில்லை என்றும், இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாவதாக தலைமை செயலகத்துக்கு அதிகளவில் புகார் வந்தது. இந்நிலையில் நிர்வாக சீர்திருத்தத்துறையின் கண்காணிப்பாளர் கலியபெருமாள் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் குடிமை பொருள் வழங்கல் துறை அலுவலகத்திற்கு வந்து தீவிர ஆய்வு பணி மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகாரிகள், ஊழியர்கள் அறைக்கு சென்று சரியாக பணிக்கு வந்துள்ளார்களா என்று ஆய்வு செய்து வருகிறார்கள். இதில் 50% பேர் சரியான நேரத்தில் பணிக்கு வரவில்லை என்று தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஆய்வுக்குழு தலைமை செயலருக்கு ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன் பிறகு சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu