கல்லுாரிகள் மற்றும் பல்கலைகழகங்களில் 'கிரெடிட்' மதிப்பெண் வழங்குவதற்கான புதிய முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு பல்கலைக்கழகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் உள்ள ஒவ்வொரு அம்சமும், கல்லுாரி மற்றும் பல்கலைகழக படிப்புகளில் படிப்படியாக அமல்படுத்தப்படுகிறது. அதில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்பில் கிரெடிட் மதிப்பெண் வழங்கும் முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து, பல்கலைகள் மற்றும் கல்லுாரிகள் தரப்பில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உயர் கல்வி நிறுவனங்களில் விரிவான தொழிற்கல்வியை ஊக்குவிக்க வேண்டும். புதிய கிரெடிட் மதிப்பெண் முறை குறித்து மண்டல வாரியாக ஐ.ஐ.டி.,க்கள் சார்பில் கருத்தரங்கம் நடத்தப்படவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.