தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் குழந்தை பிறப்பு 40 சதவீதமாக அதிகரிப்பு

November 22, 2022

தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் நடக்கும் பிரசவம் 40 சதவீதமாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சில ஆண்டுகளாக தனியார் மருத்துவமனையில் பார்க்கப்படும் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதற்கு, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரவசம் பார்ப்பதில், மக்களுக்கு ஏற்பட்டுள்ள நம்பிக்கையின்மை முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2011-ம் ஆண்டில் 28.3 சதவீதம் பிரசவம் பார்க்கப்பட்டது. அது தற்போது 10.7 சதவீதம் என்ற நிலையில் […]

தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் நடக்கும் பிரசவம் 40 சதவீதமாக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் சில ஆண்டுகளாக தனியார் மருத்துவமனையில் பார்க்கப்படும் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதற்கு, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரவசம் பார்ப்பதில், மக்களுக்கு ஏற்பட்டுள்ள நம்பிக்கையின்மை முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2011-ம் ஆண்டில் 28.3 சதவீதம் பிரசவம் பார்க்கப்பட்டது. அது தற்போது 10.7 சதவீதம் என்ற நிலையில் உள்ளது.

இதற்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் மற்றும்  உட்கட்டமைப்பு வசதி இல்லாதது முக்கிய காரணமாகும். கர்ப்பிணி அல்லது சிசு உயிரிழப்பு போன்றவை நம்பிக்கையின்மையை அதிகரித்துள்ளது. தற்போது 60 சதவீத பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளிலும், 40 சதவீதம் தனியார் மருத்துவமனைகளிலும் நடைபெறுகின்றன. இதே நிலை தொடர்ந்தால் தனியார் மருத்துவமனைகளில் பார்க்கப்படும் பிரசவங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu