கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்காக, டி-ஷர்ட்டுகள், ட்ராக் சூட்டுகள், தொப்பிகள் போன்ற விளையாட்டு உடைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டின் திருப்பூரில் இருந்து இவை கத்தாருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
திருப்பூரில் இருந்து தமிழ்நாட்டு துறைமுகங்கள் மற்றும் அண்டை மாநிலங்களின் துறைமுகங்கள் வழியாக ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில், அக்டோபர் 1ம் தேதி முதல் நவம்பர் 12 ஆம் தேதிக்குள், 17 கார்மெண்ட் கன்சைன்மெண்டுகள் கொச்சின் விமான நிலையத்திலிருந்து தோகா சென்றடைந்துள்ளது தெரிய வந்துள்ளது. இவை உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்காக அனுப்பப்பட்டவை ஆகும். எனவே, இந்தப் போட்டி தொடருக்கு பின்னர், சர்வதேச அளவில், திருப்பூர் ஆடைகளுக்கான தேவை அதிகரிக்கும் எனவும், ஏற்றுமதி உயரும் எனவும் சொல்லப்பட்டுள்ளது. இதனால், திருப்பூர் பின்னலாடை துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.














